Monday, November 19, 2007

இணையதளத்தில் பழம், காய்கறி மொத்த விற்பனை


கிருஷ்ணகிரி மாவட்டம் பொச்சம்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் இணையதளத்தில் மாம்பழம் மொத்த விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் இணையதளத்தில் பழம், காய்கறி மொத்த விற்பனை ஆரம்பிக்க ஸபல் நேஷனல் எக்ஸ்சேஞ் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

  • முதலில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி.
  • விவசாயிகள் விளைபொருளை வினியோக மையத்தில் ஸபல் நிறுவன வரைமுறைப்படி தர வாரியாக பிரித்துத் தரவேண்டும். ஸபல் நிறுவனம் பரிசோதனை செய்து தரச் சான்றிதழ் வழங்கும்.
  • அளவு, தரம், நிறம் மற்றும் வடிவம் சரியாக இருந்தால்தான் விற்பனைக்கு அனுமதி.
  • ஸபல் நிறுவனம் கிடங்கு, மற்ற வசதிகள் செய்து தரும்.
  • பணம் செலுத்திய பின்னர் ஸபல் நிறுவனம் வாங்கியவர்களிடம் விளைபொருளை ஒப்படைக்கும்.
  • அடுத்து விற்றவர்களுக்கு உடன் பணம் தரப்படும்.
  • ஒவ்வொரு விற்பனைக்கும் விற்ற விலை நாடு முழுவதும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

விவசாயிகளுக்கு பயன்:

  • விவசாயிகள் அறுவடை செய்யும் முன்னரே விலை தெரிந்து கொள்ளலாம்.
  • இடைத்தரகர்கள் குறைவு, ஆகவே செலவும் குறைவு.
  • விற்ற பணம் கிடைக்க ஸபல் நிறுவனம் உத்திரவாதம் தருகிறது.
  • தரக்கட்டுப்பாடு விளைபொருளை நல்ல விலைக்கு விற்க வழி செய்கிறது.

No comments: