
இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:
- இந்திய அரசாங்கம் முழுமையான சுகாதாரம் அடைந்த பஞ்சாயத்துகளுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 500,000 வரை பரிசளிக்கிறது.
- ஏழ்மைக்கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இந்த செலவில் அரசு உதவி உண்டு.
- பல மாநில அரசுகள் சமூகத் தலைமையில் சுய சேவைச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்துகின்றன.
- தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் மாநில கிராமிய வளர்ப்பு பணிமனை ஒரு கிராமிய சுகாதார பூங்கா அமைத்துள்ளது. அங்கு 22 மாதிரி கிராமக் கழிப்பறைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விலை ரூ. 150 முதல் ரூ. 850 வரை.
- ஹரியாணா: 158,000 -க்கு மேல் வீடுகளிலும், 2,267 பள்ளிக்கூடங்களிலும், 1,042 குழந்தை பராமரிப்புக் கூடங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 60 சுகாதாரப் பொருள் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
- கர்நாடக மாநிலம் கிராமங்களில் தபால் ஊழியர்கள் மூலமாக சுகாதாரம் பற்றி செய்தி பரப்ப தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
- தமிழ் நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமிய சுகாதாரத்தை பரப்ப நூதன முறைகளைக் கையாள்கின்றனர்.
திட்டத்தின் பயன்கள்:
- காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு முதலான தண்ணீரால் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.
- சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுவது குறையும்.