
தமிழ் நாட்டில் அம்பாசமுத்திரத்தில் ஒரு பெண், மருத்துவ உதவியாளர் உதவியுடன், தேனியில் உள்ள டாக்டரிடம் கண் பரிசோதனை பெருகிறார்.
தொலை மருத்துவத்தில் நன்மைகள்:
- நோயாளி டாக்டரைப் பார்க்க சுற்றத்தாருடன் நெடுந்தூரம் பயணம் செய்து, அங்கு பல நாட்கள் தங்கி, அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.
- மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற முடியும்.
- எளிதில் பயணம் செய்ய முடியாத ஊர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கிறது.
தொலை மருத்துவ வசதி செய்து தரும் மற்ற மருத்துவ மனைகள் சில:
- நாராயண இருதயாலயா, பெங்களூர்: எளிதில் பயணம் செய்ய முடியாத ஊர்களில் வீடியோ மூலம் இருதய நோய்க்கு ஆலோசனை பெற முடியும். இதன் மூலம் பல குடும்ப மருத்துவர்கள் இருதய நோயை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.
- அபொல்லோ மருத்துவ மனை, சென்னை: மிசோராம் மாநிலத்தில் ஐசாவல் நகரம் போன்ற பயணம் செய்ய முடியாத ஊர்கள் சேர்ந்த பெரிய தொலை மருத்துவ அமைப்பு உண்டு.
- அம்ரிதா மெடிகல் இன்ஸ்டிட்யூட், கொச்சி: ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்ற வசதியுள்ள நடமாடும் ஆஸ்பத்திரி உண்டு
- மணிபால் மருத்துவ மனை, பெங்களூர்.
- சர் கங்கா ராம் மருத்துவ மனை, புது டெல்லி.
- சர்க்கரை வியாதி ஆராய்ச்சி அற நிலையம், சென்னை.
- டாக்டர் வெங்கட்ராவ் தாவ்லே மருத்துவ அற நிலையம், அம்பாஜோகாய் , மராட்டிய மாநிலம்.
No comments:
Post a Comment