Wednesday, January 9, 2008

தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம்

சமீபத்தில் தமிழ் நாடு கிருஷ்ணகிரி தாலுக்கா வேப்பனபள்ளி கிராமத்தில் சுகாதார பொருள்கள் கடை திறக்கப்பட்டது. இது இந்த மாவட்டத்தின் தூய கிராம திட்டத்தின் ஒரு அங்கம்.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:

திட்டத்தின் பயன்கள்:

  • காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு முதலான தண்ணீரால் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.
  • சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுவது குறையும்.

Sunday, January 6, 2008

தகவல் உரிமைச்சட்டம் கிராமப்புறங்களை மாற்றும் ஆற்றல் கொண்டது

உத்திரப் பிரதேசத்தில் பாஹ்ரைச் மாவட்டத்தில் சிதாகனா ஜோட் கேஷவ் கிராமம் ஒரு உதாரணம். ஐந்து ஊக்கமுள்ள கிராமவாசிகள் தகவல் உரிமைச்சட்டப்படி மாவட்ட ஆட்சிக்கு விண்ணப்பம் கொடுத்தனர். கிராம சாலைகள் மற்றும் வடிகால்கள் பற்றியும், 'இந்திரா அவாஸ் யோஜனா' என்ற கிராம வீட்டு வசதித் திட்டப்படி செய்யப்பட்ட வேலைகள் மற்றும் செலவு விபரம் கேட்டனர்.

மாவட்ட ஆட்சி உடனடியாக சாலை மற்றும் வடிகால்கள் வேலையைத் துவக்கியது. 32 கிராம வாசிகளுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அத்துடன் எந்த கிராமவாசிகள் கிராம வீட்டு வசதித் திட்டப்படி வீடுகள் கொடுக்க தகுதியானவர்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது.


தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் அரசாங்கத்திடம் கீழ்க்கண்டவற்றைக் கேட்டு மனு கொடுக்கலாம்:
  • அரசாங்க வேலைகள், ஆவணங்கள், பதிவுகள்.
  • அவற்றை பிரதி, குறிப்பு எடுக்கலாம்.
  • மின் அச்சு அல்லது மின் பிரதி கேட்கலாம்.
விண்ணப்ப்பம் கொடுப்பது எப்படி:
  • எழுத்திலேயோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ ஆங்கிலம், ஹிந்தி அல்லது அந்த மாநில மொழியில் விண்ணப்பம் பொதுமக்கள் தகவல் அதிகாரிக்கு கொடுக்கலாம். மாதிரி இங்கே.
  • தகவல் கேட்பதற்கு காரணம் கொடுக்க வேண்டியதில்லை.
  • விண்ணப்ப கட்டணம் ரூ. 10. அத்துடன் பிரதி ஒன்றுக்கு சுமார் ரூ. 2.
  • பீஹார் மாநிலத்தில் தொலைபேசி மூலமாகவே விண்ணப்பம் கொடுக்கலாம்.
  • பல சமூக சேவை சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய உதவி செய்கிறார்கள். உங்கள் ஊரில் விசாரிக்கவும்.

Thursday, January 3, 2008

தொலை மருத்துவம் கிராம மக்களின் உடல் நலக் காப்புக்கு உதவுகிறது


தமிழ் நாட்டில் அம்பாசமுத்திரத்தில் ஒரு பெண், மருத்துவ உதவியாளர் உதவியுடன், தேனியில் உள்ள டாக்டரிடம் கண் பரிசோதனை பெருகிறார்.

தொலை மருத்துவத்தில் நன்மைகள்:

  • நோயாளி டாக்டரைப் பார்க்க சுற்றத்தாருடன் நெடுந்தூரம் பயணம் செய்து, அங்கு பல நாட்கள் தங்கி, அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.
  • மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற முடியும்.
  • எளிதில் பயணம் செய்ய முடியாத ஊர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கிறது.

தொலை மருத்துவ வசதி செய்து தரும் மற்ற மருத்துவ மனைகள் சில:

இந்த திட்டத்தை விரிவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கீழ்க்கண்ட மருத்துவ மனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது:

  • மணிபால் மருத்துவ மனை, பெங்களூர்.
  • சர் கங்கா ராம் மருத்துவ மனை, புது டெல்லி.
  • சர்க்கரை வியாதி ஆராய்ச்சி அற நிலையம், சென்னை.
  • டாக்டர் வெங்கட்ராவ் தாவ்லே மருத்துவ அற நிலையம், அம்பாஜோகாய் , மராட்டிய மாநிலம்.