Monday, October 29, 2007

நுண் கடன் திட்டம் நில வளம், தண்ணீர் வசதி மற்றும் பல வழிகளில் கிராம மக்கள் வருவாயைப் பெருக்குகிறது

ஆந்திரா மாநிலம், சித்யாலா கிராமத்திலுள்ள பாக்யம்மா வத்லா எறுமை மாடு வாங்க நுண் கடன் வாங்கினார். அதன் மூலம் பால் விற்று தினப்படி வருவாய்க்கு வழி பிறந்தது.

நுண் கடன் கொடுப்பவர்கள்:

  • SKS Microfinance: 14 மாநிலங்களில் 507 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேஷ். மாடு வாங்க, விவசாயம், காய்கறிக் கடை போன்ற சிறு தொழில்கள், கூடை முடைதல், பானை செய்வது போன்ற கைவினைப் பொருட்கள், மற்றும் புகைப்படம், ப்யூட்டி பார்லர் போன்ற புதிய தொழில்களுக்கும் கடன் கொடுக்கிறார்கள்.
  • SHARE Microfin Limited: 312 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, சட்டீஸ்கர், கர்னாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேஷ்.
    Gramin Koota: 44 கிளைகள் முக்கியமாக கர்னாடகா.
  • SEWA Bank: முக்கியமாக குஜராத்.
  • Spandana Charity Trust: முக்கியமாக ஆந்திரா.
  • ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி மற்றும் இதர வங்கிகள்.
  • தமிழ் நாட்டில் விவசாயம் மற்றும் தண்ணீர் வேலைக்கு நுண் கடன் வாங்க விவரங்களுக்கு தன் அறநிறுவனம் நம்பரைக் கூப்பிடலாம் - 26280236 (சென்னை) அல்லது 04522601673 (மதுரை).

Thursday, October 25, 2007

சேதாரம் குறையவும், தரம் மிகுந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் சூரிய வெப்பக் கருவியில் காய வையுங்கள்



லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாயக் கல்லூரி தயார் செய்த நகற்றக் கூடிய சூரிய வெப்பக் கருவி.

  • இதுவரை செய்யப்பட்டு வரும் பெட்டி மாதிரி கருவிகளை விட 100 சதவிகிதம் அதிக திறன் கூடியது.
  • வெய்யிலில் காய வைப்பதை விட 70 சதவிகிதம் அதிக விலை பெறுங்கள்.
  • 20-30 கிலோ சிவப்பு மிளகாய்களை 3-4 வெய்யில் நாட்களில் காய வைக்கலாம்.
  • இந்த கருவியை சுமார் ரூ. 5500/- க்கு வாங்க அணுகவும்: M/s Vishwa Karma Solar Energy Corporation (Regd.), Phillaur - 144 410, Punjab.

சூரிய வெப்பக் கருவி தயார் செய்யும் மற்ற நிறுவனங்கள்:

  • மிளகாய், காய்கறி, மீன் மற்றும் மூலிகைகள் காய வைக்க முடியும்: ATR SOLAR (INDIA), 380, Kamarajar I street Bibikulam MADURAI - 625 002,TAMIL NADU Tel: 0452 - 4353673, 3256595 Email: atrsolar@gmail.com, theri@atrsolar.com
  • காய்கறி (உருளைக் கிழங்கு பொடி), பழம் (தக்காளி பொடி), மூலிகைகள் மற்றும் மிளகாய்ப் பொடி காய வைக்க முடியும்: PRINCE India, Jankibai Trust, Shamgiri, Agra Road, Deopur, DHULE - 424 005, Maharashtra. Tel: 02562 - 271795 Email: contact@princeindia.org

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Tuesday, October 23, 2007

தமிழ் நாட்டில் விவசாயிகளுக்காக ஒவ்வொரு வட்டத்திற்கும் வானிலை முன் அறிவிப்பு



தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் உள்ள விவசாய வானிலை ஆராய்ச்சி மையம் செய்யும் சேவை:
  • மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திற்கும் வானிலை முன் அறிவிப்பு.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை - வெப்ப தட்பம், காற்று வீசும் வேகம், காற்றில் ஈரம் அளவு மற்றும் மழையளவு.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு காலை எட்டரை மணிக்கும், மாலை இரண்டரை மணிக்கும் நிலவரம் வரைபடத்திலும் பார்க்கலாம்.

குறிப்பு: உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் தமிழில் எழுத:

  • தலைப்பில் கிளிக் (click) செய்யுங்கள்.
  • 'Post a comment' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.
  • முதலில் ஒரு தமிழ் எடிட்டரில் (editor) யூனிக்கோடில் (Unicode) தமிழில் எழுதிக்கொள்ளுங்கள்.
  • அதன் பிரதியை (copy) எடுத்து 'Leave your comment' என்ற பெட்டியில் ஒட்டுங்கள் (paste).
  • பின்னர் 'Publish your comments' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.

Monday, October 22, 2007

விவசாயிகள் ஆலோசனைக்கு இலவச தொலைபேசி சேவை

இந்திய அரசாங்கத்தின் விவசாய அமைச்சகம் செய்யும் சேவை:

  • 2004 ஜூன் மாதம் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
  • விவசாயிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர.
  • தொலைபேசிக் கட்டணம் கிடையாது.
  • இந்தியா முழுவதும் ஒரே நம்பர் - 1551.
  • விவசாயிகள் தங்கள் மொழியிலேயே பேசலாம்.
  • முதல் கட்டமாக விவசாயப் பட்டதாரிகள் பதில் அளிப்பார்கள்.
  • இரண்டாவது கட்டமாக விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் விவசாய அமைச்சகம் சார்ந்த வல்லுனர்கள் ஆலோசனை கூறுவர்.

Friday, October 19, 2007

குறைந்த தண்ணீர் - அதிக விளைச்சல்!



பவானி தாலுக்கா பெரியபுலியூர் கரும்புத் தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம்.

சொட்டு நீர்ப்பாசன அமைப்பு செய்யும் நிறுவனங்கள்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Thursday, October 18, 2007

விவசாய அமைச்சர் ஷரத் பாவார் சொல்கிறார் - விவசாயத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள்!

விவசாயத்தை மட்டும் நம்பி இல்லாமல், வேறு வருமானத்திற்கும் வழி பாருங்கள்.

Wednesday, October 17, 2007

தமிழக விவசாயிகள் கோவையிலேயே ஆர்கானிக் சான்றிதழ் பெறலாம்.



தமிழ் நாடு குமிழியில் ஆர்கானிக் என்ற இயற்கை வேளாண்மை முறைப் பண்ணை.

Wednesday, October 10, 2007

விவசாயிகளுக்கு மொபைல் போனில் தகவல் (SMS)

நீங்களும் கூடிய சீக்கிரம் மொபைல் போனில் தகவல் (SMS) பெறலாம்:

  • ராய்ட்டர் செய்தி நிறுவனம் தொடங்கியுள்ள புதிய சேவை.
  • சரக்கு மார்க்கெட் விலை விபரம், செய்தி மற்றும் வானிலை.
  • இப்பொழுது வெங்காயம், சோளம் விலை விபரம். அடுத்து கோதுமை, சோயா, ஆரஞ்சு இதர சரக்குகள்.
  • ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில்.
  • இப்பொழுது மராட்டிய மாநிலம். அடுத்து பஞ்சாப், குஜராத் மற்றும் கர்னாடகம். பின்னர் மற்ற மாநிலங்கள்.
  • ஒரு நாளைக்கு மூன்று முறை தகவல்.
  • 4000-க்கு மேல் விவசாயிகள் சந்தாதாரராக சேர்ந்துள்ளனர்.
  • சந்தா மாதம் ரூ 60.

Tuesday, October 2, 2007

இன்டர்நெட் மூலமாக உங்கள் ஊரிலிருந்தே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம்!

ஈபே (eBay) என்ற இன்டர்நெட் வியாபார தளம் மூலம் பலர் ஆடை, ஆபரணங்கள், தரை விரிப்பு, புடவை, திரைச்சீலை, மரம், தோல் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள்.
குறிப்பு: உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் தமிழில் எழுத:
  • தலைப்பில் கிளிக் (click) செய்யுங்கள்.
  • 'Post a comment' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.
  • முதலில் ஒரு தமிழ் எடிட்டரில் (editor) யூனிக்கோடில் (Unicode) தமிழில் எழுதிக்கொள்ளுங்கள்.
  • அதன் பிரதியை (copy) எடுத்து 'Leave your comment' என்ற பெட்டியில் ஒட்டுங்கள் (paste).
  • பின்னர் 'Publish your comments' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.