Wednesday, November 28, 2007

படிக்காத கிராமத்துப் பெண்களுக்கு தொழிற் பயிற்சி



மராட்டிய மாநிலம் ஸதாராவில் மன் தேஷி உத்யோகினியில் வெற்றிகரமாக பயிற்சி முடித்த ஒரு பெண்.

மன் தேஷி மஹிளா ஸஹகரி பாங்கு, HSBC பாங்குடன் சேர்ந்து அளிக்கும் சேவை.
  • கிராமத்துப் பெண்கள் நுண் கடன் வாங்கி தொழில் தொடங்க உதவும்.
  • மாணவிகளின் திறமை மற்றும் ஆர்வங்களை தெரிந்து கொள்ள முதலில் இலவச கவுன்சலிங் தரப்படும்.
  • ஒவ்வொரு மாணவிக்கும் எந்த பயிற்சிகள் தேவை என்பது முடிவு செய்யப்படும்.
  • பயிற்சிகள் ஒரு நாள் முதல் 10 நாள் வரை.

தரப்படும் பயிற்சிகள்:

  • கம்ப்யூட்டர் பயிற்சி, பை செய்யும் முறை முதலான தொழிற் பயிற்சிகள்.
  • பண வரவு செலவு பயிற்சி.
  • வியாபார நுட்பம், வியாபார முறையாகப் பேசவும், எழுதவும் பயிற்சி.
  • தன்னம்பிக்கைப் பயிற்சி.

Tuesday, November 27, 2007

விவசாயிகளுக்கு கான்ட்ராக்ட் விவசாயம் பயனளிக்கிறது



கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் விலாஸ்பூர் கான்ட்ராக்ட் விவசாயி ப்ரகாஷ் குல்கர்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து கூர்க்கங் கிழங்கு பயிர் செய்கிறார்.

கான்ட்ராக்ட் விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது சமீபத்தில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

  • முக்கியமாக விளைச்சல் செலவும், விற்பனை செலவும் மிகக் குறைவு.
  • கான்ட்ராக்டர்கள் விதை கூடிய இதர பொருட்களும் கொடுத்து, தொழில் நுட்ப உதவியும் செய்கிறார்கள்.
  • விளைபொருளை அறுவடைக்கு பின்னர் தரம் மேம்பாடு செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள்.
  • மேலான தரம், மற்றும் தொடர்ச்சியாக விளைபொருள் கிடைப்பதற்கு கான்ட்ராக்ட் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

கான்ட்ராக்ட் விவசாயத்துக்கு மற்ற உதாரணங்கள்:

Monday, November 19, 2007

இணையதளத்தில் பழம், காய்கறி மொத்த விற்பனை


கிருஷ்ணகிரி மாவட்டம் பொச்சம்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் இணையதளத்தில் மாம்பழம் மொத்த விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் இணையதளத்தில் பழம், காய்கறி மொத்த விற்பனை ஆரம்பிக்க ஸபல் நேஷனல் எக்ஸ்சேஞ் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

  • முதலில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி.
  • விவசாயிகள் விளைபொருளை வினியோக மையத்தில் ஸபல் நிறுவன வரைமுறைப்படி தர வாரியாக பிரித்துத் தரவேண்டும். ஸபல் நிறுவனம் பரிசோதனை செய்து தரச் சான்றிதழ் வழங்கும்.
  • அளவு, தரம், நிறம் மற்றும் வடிவம் சரியாக இருந்தால்தான் விற்பனைக்கு அனுமதி.
  • ஸபல் நிறுவனம் கிடங்கு, மற்ற வசதிகள் செய்து தரும்.
  • பணம் செலுத்திய பின்னர் ஸபல் நிறுவனம் வாங்கியவர்களிடம் விளைபொருளை ஒப்படைக்கும்.
  • அடுத்து விற்றவர்களுக்கு உடன் பணம் தரப்படும்.
  • ஒவ்வொரு விற்பனைக்கும் விற்ற விலை நாடு முழுவதும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

விவசாயிகளுக்கு பயன்:

  • விவசாயிகள் அறுவடை செய்யும் முன்னரே விலை தெரிந்து கொள்ளலாம்.
  • இடைத்தரகர்கள் குறைவு, ஆகவே செலவும் குறைவு.
  • விற்ற பணம் கிடைக்க ஸபல் நிறுவனம் உத்திரவாதம் தருகிறது.
  • தரக்கட்டுப்பாடு விளைபொருளை நல்ல விலைக்கு விற்க வழி செய்கிறது.

Thursday, November 1, 2007

குளிர் மாதங்களிலும் மல்லிகைப் பூ விளைய சிறு விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் உதவி செய்கிறது


கடந்த இரண்டு ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் கரியபட்டி கிராமத்தில் 60-70 சிறு விவசாயிகள் குளிர் மாதங்களிலும் வெற்றிகரமாக மல்லிகை மொக்கு அறுவடை செய்கிறார்கள்.
  • மல்லிகைப் பூ வருடம் முழுவதும் தேவைப் படுகிறது. ஆனால் குளிர் மாதங்களில் விளைவதில்லை.
  • கோவை விவசாய அமைச்சகம் செய்த தொழில் நுட்ப ஆராய்ச்சி.
    குளிர் மாதம் வரும் முன்னரே பயிரை கவனமாக பேணிக்கும் முறை ஆரம்பிக்கப் படும்.
  • தண்ணீரில் உரமும், ஒவ்வொரு மொட்டும் பூவாக பாஸ்பரஸ் சேர்த்து போடுகிறார்கள்.
  • இருபது சென்ட் நிலத்தில் தினம் 5-6 கிலோ மல்லிகை மொக்கு அறுவடை.
  • இந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் மற்றும் நெற்பயிருக்கும் உதவி செய்கிறது.
  • உதாரணமாக கத்தரிச்செடி பூ உதிராமல் பாதுகாக்க தொழில் நுட்ப வழி உண்டு.