Monday, December 31, 2007

ஏ.டி.எம். என்ற தானியங்கி வங்கி இயந்திரங்கள் இந்திய கிராமங்களில் வர ஆரம்பித்துள்ளன


இந்தியாவில் 2007 வருட கடைசியில் சுமார் 30,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. பெரும்பாலாக இவை நகரங்களிலேயே உள்ளன. ஆனால் இப்பொழுது வங்கிகள் இந்த சேவையை கிராமங்களுக்கும் அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன:
  • கிராமங்களிலும் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
  • சில வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த விவசாயிகள் கடன் மனு கொடுத்து அனுமதி பெறுவதற்கு மட்டுமே வங்கிக்குச் செல்ல வேண்டும். மற்ற வேலைகளை ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே செய்யலாம்.

மற்றும் கிராமங்களுக்கு உகந்த பல அம்சங்கள் உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் வர ஆரம்பித்துள்ளன:

Friday, December 28, 2007

கிசான் கிரெடிட் கார்ட் மூலம் விவசாயக் கடன் இப்பொழுது எளிதாகக் கிடைக்கிறது

இந்திய அரசாங்கம் 1999-ல் கிசான் கிரெடிட் கார்ட் (விவசாயக் கடன் அட்டை) திட்டத்தைத் துவக்கியது.

சமீபத்தில் செய்த ஒரு மதிப்பீடுப் படி 2007 வருட ஆரம்பத்தில் 6.5 கோடிக்கு மேல் இந்த கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக இந்தக் கடனை விவசாய வரவு செலவுக்கு உபயோகம் செய்யலாம். விதை, உரம், பூச்சி மருந்து, கருவிகள் வாங்கவும் கூலி கொடுக்கவும் கடன் வாங்கலாம். அறுவடை செய்து விற்ற உடன் கடன் திருப்பித் தர வேண்டும். அடுத்த பயிருக்கு திரும்ப கடன் கிடைக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியாமல் விவசாயிகள் சங்கடப்படுவதை இது தடுக்கும்.

2004-ல் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது:

இந்திய அரசாங்கம் 2003-ல் ஸ்வரோஜ்கர் (தானே தொழில் செய்பவர்) கிரெடிட் கார்ட் திட்டத்தைத் துவக்கியது. கைத்தறி நெய்பவர்கள், மீனவர்கள், ரிக்ஷா உரிமையாளர்கள், மற்ற சிறு தொழில் செய்பவர்களும், தானே தனக்குதவி குழுமங்களும் இந்தக் கடனை வரவு செலவுக்கும் தொழில் முதலீடு செய்வதற்கும் உபயோகிக்கலாம். விவசாயத்தை ஒட்டிய மீன் பண்ணை, பால் பண்ணை போன்ற தொழில்களுக்கும் இந்தக் கடனை உபயோகிக்கலாம். 2006 செப்டம்பர் மாதம் வரை சுமார் 5 லட்சம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் கீழ்க்கண்ட வங்கிகளிடமிருந்து கிசான் கிரெடிட் கார்ட், ஸ்வரோஜ்கர் கிரெடிட் கார்ட் வாங்க முடியும்:

  • அரசாங்க அல்லது தனியார் வங்கி
  • கூட்டுறவு வங்கி
  • பிராந்தியக் கிராமிய வங்கி

Wednesday, December 26, 2007

டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் உபயோகித்தால் விளைச்சலும், லாபமும் அதிகம்


தமிழ் நாடு தேனி மாவட்டம் டிஷ்யூ கல்சர் வாழை பயிரிடுவதில் முக்கிய மையமாக விளங்குகிறது. அங்கு விவசாயிகள் டிஷ்யூ கல்சர் உபயோகித்து கிராண்ட் நெயின் என்ற வகை வாழை பயிரிடுகிறார்கள்.

டிஷ்யூ கல்சர் இவ்வளவு பிரபலமாக என்ன காரணம்?
  • விளைச்சல் அதிகம்.
  • வியாதி, பூச்சி குறைவு.
  • எல்லா பருவ காலங்களிலும் இளஞ்செடிகள் கிடைக்கும்.
  • உன்னதமான வகைகளை தேர்ந்தெடுத்து இளஞ்செடிகள் தயாரிக்கப் படுகின்றன.
கீழ்க்கண்ட செடிகள் வியாபார ரீதியாக பெரிய அளவில் தயாரிக்கப் படுகின்றன:
  • பழங்கள்: வாழை, அன்னாசி
  • கரும்பு: கரும்பு ஆலைகள் டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகளை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளன.
  • வாசனைப் பொருள்கள்: கொச்சியில் உள்ள வாசனைப் பொருள்கள் கழகம் முற்போக்கு விவசாயிகள் மூலம் டிஷ்யூ கல்சர் ஏலக்காய், வனில்லா பயிர் செய்வதை அதிகரித்துள்ளது.
  • மூலிகைகள்: கத்தாழை, வெள்ளை முசிலிக் கிழங்கு.
  • பூக்கள்: Carnation, Gerbera.
  • மரங்கள்: சந்தனம், யூகலிப்டஸ், தேக்கு.
இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட இரண்டு தொழில் நுட்பப் பூங்காக்களை அமைத்துள்ளது:
மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளும் உண்டு - உங்கள் அருகிலுள்ள விவசாய அலுவலகத்தில் விசாரியுங்கள்.

கனரா வங்கி மற்றும் சில வங்கிகளும் டிஷ்யூ கல்சர் விவசாயக் கடனுக்கு முதன்மை அளிக்கிறார்கள்.

Tuesday, December 25, 2007

கிராமியக் கண்டுபிடிப்புகளுக்கு ஆறாவது தேசியப் போட்டி

மராட்டிய மாநிலம் நாஸிக் ராம்தாஸ் மாதவராவ் ஜக்தப் கண்டுபிடித்த திராட்சையை தரவாரியாகப் பிரிக்கும் கருவி மூன்றாவது தேசியப் போட்டியில் பரிசு பெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ. 1,00,000, இரண்டாம் பரிசு ரூ. 50,000, மூன்றாம் பரிசு ரூ. 25,000.

  • கண்டுபிடிப்பு வகைகள்: இயந்திரங்கள், கருவிகள், தயார் செய்யும் முறைகள், எரிபொருள் மற்றும் மின்சாரம் குறைவாக உபயோகிக்கும் வழி, கடினமான வேலைகளை எளிதாக்குவது மற்றும் மூலிகை மருந்துகள்.
  • தரம் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு செய்வதில் திறமை படைத்த தனி மனிதர்களும், குழுமங்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

உங்கள் கண்டுபிடிப்புக்கு கீழ்க்கண்ட வேலைகளுக்கு நிதி கிடைக்கவும் வழியுண்டு:

  • தொழில் திட்டம் தயார் செய்ய.
  • மாதிரி தயார் செய்து, சோதனை செய்ய.
  • முன்னோடியாக தயாரிக்க.
  • வியாபார ரீதியாக தயாரிக்க.

உதாரணமாக ஹைதராபாத் மாட்ரிக்ஸ் பயோஸயின்ஸ் நிறுவனம் கீழ்க்கண்ட கண்டுபிடிப்புகளை வியாபார ரீதியாக NIF-உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிட்டுள்ளது:

போட்டியில் சேர:

  • உங்கள் கண்டுபிடிப்பு பற்றிய முழு விவரங்களையும் வெள்ளை காகிதத்தில் எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். கண்டுபிடித்தவர் படிப்பு, எப்படிக் கண்டுபிடித்தது கூடிய விவரங்களும், புகைப்படம் மற்றும் நிழற் படமும் முடி்ந்தால் அனுப்புங்கள். மூலிகை மருந்துக்கு காய்ந்த மூலிகையையும் வைத்து அனுப்பவும்.
  • கடைசி தேதி: 31 டிசம்பர் 2008.
  • அனுப்ப வேண்டிய முகவரி: National Coordinator (scouting and documentation), National Innovation Foundation (NIF), Satellite Complex, Bungalow No 1, Premchandnagar Road , Jodhpur Tekra, Ahmedabad 380015 Gujarat
  • மின் அஞ்சலில் அனுப்ப: campaign@nifindia.org

Monday, December 24, 2007

சுலபமாக குடிநீரை சுத்தம் செய்யும் வழி


குடிநீரை சுத்தம் செய்யும் முறை:
  1. மூடி உள்ள தெளிவான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
  2. தண்ணீரை நிரப்பி மூடுங்கள்.
  3. பாட்டில்களை நெளிந்த தகரத்தில் வெய்யிலில் வையுங்கள்.
  4. அல்லது படத்தில் காட்டியவாறு கூறை மேல் வைக்கலாம்.
  5. வெய்யிலில் ஆறு மணி நேரம் வைக்கவும்.
  6. இப்பொழுது குடிநீர் உபயோகத்துக்குத் தயார்.
மற்ற ஆலோசனைகள்:
  • தெளிவான பாட்டில் எடுத்துக கொள்வது முக்கியம். பழுப்பு, பச்சை பாட்டில்கள் வேலை செய்யாது.
  • ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டருக்கு மேல் பெரிய பாட்டில் வேண்டாம்.

Saturday, December 22, 2007

கிராமங்களுக்கு செலவு குறைந்த, புகை வராத அடுப்பு



தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் அவியூர் கிராமத்தில் விவசாயக்கழிப்பு எரிபொருள் உபயோகம் செய்யும் புகை வராத 'ஊர்ஜா' அடுப்பு.


மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 5000 வீடுகளில இந்த அடுப்பை உபயோகம் செய்கிறார்கள்.

  • பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகம் வடிவமைத்தது.
  • அடுப்பு சீராக எறிவதற்காக பாட்டரியில் ஓடும் சிறிய மின்விசிறி உண்டு. இந்த பாட்டரி கரண்டில் சார்ஜ் செய்யக்கூடியது.
  • அடுப்பு விலை ரூ. 675.
  • ஆறு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு மாதம் சுமாராக ஆறு பை எரிபொருள் தேவை. ஒரு 5-கிலோ பை எரிபொருள் விலை ரூ. 20. இத்துடன் 3 லிட்டர் கெரொசின் சேர்த்து மாத மொத்தச் செலவு ரூ. 147. இந்த குடும்பத்துக்கு முன்னால் ஆன செலவு ரூ. 390.
  • எரிபொருள் கரும்புச் சக்கை, நிலக் கடலைத் தோல்் மற்றும் சோளத் தட்டை மூலம் செய்யப்படுகிறது.
  • இந்த அடுப்பு தமிழ் நாடு, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் சில இடங்களில் கிடைக்கிறது.

இந்த அடுப்பில் உள்ள சில பிரச்சினைகள்:

  • தோசை சுட, சப்பாத்தி போட தீயைக் குறைக்க முடியாது.
  • அடுப்பை பத்த வைத்த பின் காஸ், கெரொசின் அடுப்பு போல உடன் நிறுத்த முடியாது.
  • பத்த வைத்த பின் மேலும் எரிபொருள் சேர்க்க முடியாது. அடுப்பை நிறுத்தி, சாம்பல் எடுத்து விட்டு, எரிபொருள் போட்டு மீண்டும் பத்த வைக்க வேண்டும். ஆனால் இதை சில நிமிடங்களில் செய்ய முடியும்.