
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ. 1,00,000, இரண்டாம் பரிசு ரூ. 50,000, மூன்றாம் பரிசு ரூ. 25,000.
- கண்டுபிடிப்பு வகைகள்: இயந்திரங்கள், கருவிகள், தயார் செய்யும் முறைகள், எரிபொருள் மற்றும் மின்சாரம் குறைவாக உபயோகிக்கும் வழி, கடினமான வேலைகளை எளிதாக்குவது மற்றும் மூலிகை மருந்துகள்.
- தரம் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு செய்வதில் திறமை படைத்த தனி மனிதர்களும், குழுமங்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
உங்கள் கண்டுபிடிப்புக்கு கீழ்க்கண்ட வேலைகளுக்கு நிதி கிடைக்கவும் வழியுண்டு:
- தொழில் திட்டம் தயார் செய்ய.
- மாதிரி தயார் செய்து, சோதனை செய்ய.
- முன்னோடியாக தயாரிக்க.
- வியாபார ரீதியாக தயாரிக்க.
- குஜராத் மாநிலத்தில் எழுதப் படிக்கத் தெரியாத விவசாயி போபட்பாய் ரூபாபாய் ஜம்புச்சா கண்டுபிடித்த இலை சுருங்கும் நோய்க்கு இயற்கை மருந்து.
- அர்க்கிபென் மித்தாபாய் வன்கர் என்ற செவிலி கண்டுபிடித்த வெள்ளை ஈ மற்ற பூச்சிகளை விரட்டும் மூலிகை மருந்து.
- உங்கள் கண்டுபிடிப்பு பற்றிய முழு விவரங்களையும் வெள்ளை காகிதத்தில் எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். கண்டுபிடித்தவர் படிப்பு, எப்படிக் கண்டுபிடித்தது கூடிய விவரங்களும், புகைப்படம் மற்றும் நிழற் படமும் முடி்ந்தால் அனுப்புங்கள். மூலிகை மருந்துக்கு காய்ந்த மூலிகையையும் வைத்து அனுப்பவும்.
- கடைசி தேதி: 31 டிசம்பர் 2008.
- அனுப்ப வேண்டிய முகவரி: National Coordinator (scouting and documentation), National Innovation Foundation (NIF), Satellite Complex, Bungalow No 1, Premchandnagar Road , Jodhpur Tekra, Ahmedabad 380015 Gujarat
- மின் அஞ்சலில் அனுப்ப: campaign@nifindia.org
No comments:
Post a Comment