
சமீபத்தில் செய்த ஒரு மதிப்பீடுப் படி 2007 வருட ஆரம்பத்தில் 6.5 கோடிக்கு மேல் இந்த கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக இந்தக் கடனை விவசாய வரவு செலவுக்கு உபயோகம் செய்யலாம். விதை, உரம், பூச்சி மருந்து, கருவிகள் வாங்கவும் கூலி கொடுக்கவும் கடன் வாங்கலாம். அறுவடை செய்து விற்ற உடன் கடன் திருப்பித் தர வேண்டும். அடுத்த பயிருக்கு திரும்ப கடன் கிடைக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியாமல் விவசாயிகள் சங்கடப்படுவதை இது தடுக்கும்.
2004-ல் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது:
- விவசாயம் மற்றும் அதைச் சேர்ந்த தொழில்களில் முதலீடு செய்வதற்கும் இந்தக் கடனை உபயோகிக்கலாம்.
- ஒரு சீரான அளவு சொந்தச் செலவுக்கும் உபயோகிக்கலாம்.
- பல வங்கிகள் குறைந்த கட்டணத்தில் விபத்துக் காப்பீடு திட்டமும் அளிக்கின்றன.
- சில வங்கிகள் ATM இயந்திரத்தில் உபயோகிக்கக் கூடிய கார்டுகள் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
இந்திய அரசாங்கம் 2003-ல் ஸ்வரோஜ்கர் (தானே தொழில் செய்பவர்) கிரெடிட் கார்ட் திட்டத்தைத் துவக்கியது. கைத்தறி நெய்பவர்கள், மீனவர்கள், ரிக்ஷா உரிமையாளர்கள், மற்ற சிறு தொழில் செய்பவர்களும், தானே தனக்குதவி குழுமங்களும் இந்தக் கடனை வரவு செலவுக்கும் தொழில் முதலீடு செய்வதற்கும் உபயோகிக்கலாம். விவசாயத்தை ஒட்டிய மீன் பண்ணை, பால் பண்ணை போன்ற தொழில்களுக்கும் இந்தக் கடனை உபயோகிக்கலாம். 2006 செப்டம்பர் மாதம் வரை சுமார் 5 லட்சம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் கீழ்க்கண்ட வங்கிகளிடமிருந்து கிசான் கிரெடிட் கார்ட், ஸ்வரோஜ்கர் கிரெடிட் கார்ட் வாங்க முடியும்:
- அரசாங்க அல்லது தனியார் வங்கி
- கூட்டுறவு வங்கி
- பிராந்தியக் கிராமிய வங்கி
No comments:
Post a Comment