
குடிநீரை சுத்தம் செய்யும் முறை:
- மூடி உள்ள தெளிவான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
- தண்ணீரை நிரப்பி மூடுங்கள்.
- பாட்டில்களை நெளிந்த தகரத்தில் வெய்யிலில் வையுங்கள்.
- அல்லது படத்தில் காட்டியவாறு கூறை மேல் வைக்கலாம்.
- வெய்யிலில் ஆறு மணி நேரம் வைக்கவும்.
- இப்பொழுது குடிநீர் உபயோகத்துக்குத் தயார்.
- சூரிய ஒளியில் உள்ள UV-கதிர் மற்றும் தண்ணீர் சூட்டில் பேதி நோய் முதலான நுண் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
- ஸ்விஸ் சுகாதாரத்த்றை கண்டுபிடித்த முறை.
- தமிழ் நாடு திருச்சி அறுகே பல கிராமங்களில் இ்ந்த முறையைப் பயன்படுத்திய விவரங்களை இங்கே படிக்கலாம்.
- தெளிவான பாட்டில் எடுத்துக கொள்வது முக்கியம். பழுப்பு, பச்சை பாட்டில்கள் வேலை செய்யாது.
- ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டருக்கு மேல் பெரிய பாட்டில் வேண்டாம்.
No comments:
Post a Comment