Wednesday, May 28, 2008

மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் உதவுகிறது


பல காலமாக தென்னிந்தியாவில் வெட்டிவேர் குடிநீரில் வாசனைக்கு போடவும், கோடை காலத்தில் குளிர்ச்சிக்கு ஜன்னல் தட்டியாகவும் உபயோகிக்கப்படுகிறது.

இப்பொழுது உலக வங்கியும், பன்னாட்டு அமைப்புகளும் வெட்டிவேர் விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவுவதை அறிய வந்துள்ளனர்.

மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் மிக உதவுகிறது.

Friday, May 16, 2008

நெசவுத் தொழிலில் வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள்



நெசவாளர்களுக்கு புதிய வழிகள்:


  • நவீன நெசவுத் தொழில் நுட்பம்.
  • செயற் திறன் வளர்ச்சி.
  • நவீன பாணி (ஃபாஷன்) வடிவமைப்பு.
  • வணிக அணுகு முறை.

பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு:

நெசவுத் தொழிலுக்கு மென்பொருள்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Thursday, May 8, 2008

மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது


மூங்கில் நல்ல லாபம் கொடுக்கும் பயிர் என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் இப்பொழுது?:

  • மூங்கில் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே மூங்கிலுக்கு தேவை அதிகம்.
  • மூங்கில் குருத்து ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தைவான், கொரியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.
  • மூங்கிலில் முள் இருப்பதால் பராமரிப்பும் அறுவடையும் கடினம். இப்பொழுது முள் இல்லாத வகை இளஞ்செடிகள் கிடைக்கிறது.
  • மூங்கில் பயிர் வேலை கொள்ளும். ஆனால் பராமரிப்புக்கும் அறுவடைக்கும் இய்ந்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
  • மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் 2007-08 ம் ஆண்டு 200 விவசாயிகளுக்கு மூங்கில் பயிர் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008-09 ம் ஆண்டு 2300 விவசாயிகளுக்கு முற்போக்கு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

மூங்கில் பயிர் செய்வதில் மற்ற பயன்கள்:

  • இருக்கும் நிலத்தில் மற்ற மரங்களை விட 20 மடங்கு அதிகம் மரம் வளரும். மற்ற மரங்கள் வளர்ந்து பலன் தர 30 ஆண்டுகள் ஆகலாம். மூங்கில் குருத்து, தண்டு 3-4 ஆண்டுகளிலேயே அறுவடை செய்யலாம்.
  • தரக்குறைவான நிலத்திலும் நன்றாக வளரும்.

டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் தயாரிப்போர்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.