
நெசவாளர்களுக்கு புதிய வழிகள்:
- நவீன நெசவுத் தொழில் நுட்பம்.
- செயற் திறன் வளர்ச்சி.
- நவீன பாணி (ஃபாஷன்) வடிவமைப்பு.
- வணிக அணுகு முறை.
- தேசிய ஃபாஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) ஃபாஷன் வடிவமைப்பு, பயிற்சி மற்றும் செயற் திறன் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆக 8 நகரங்களில் உள்ளது. கேரளா கண்ணனூரில் 9-வது மையம் திறக்கப் பட்டுள்ளது.
- கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரிகள் சேலம் முதலாக 6 நகரங்களில் உள்ளன.
- தமிழ்நாடு கோஆப்டெக்ஸ் போன்ற மாநில கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனைக்கு உதவி செய்கின்றனர்.
பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு:
- துணி பரிசோதனை மையம், மதுரை.
- நெசவாளர் பணிச் சங்கங்கள்.
நெசவுத் தொழிலுக்கு மென்பொருள்:
- EnKay CAD solutions, Bangalore: டாபி உரு அமைப்பு செய்ய. ஜாக்கார்ட் துளைப் பட்டைகள் செய்ய இலவச மென்பொருள்.
- GC's Technologies, Bangalore: தர்மாவரம், காஞ்சீபுரம், கும்பகோணம் மற்றும் கர்நாடக நெசவாளர் உபயோகிக்கும் மென்பொருள் மற்றும் இயந்திரங்கள்.
குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.
No comments:
Post a Comment