
தமிழ் நாடு தேனி மாவட்டம் டிஷ்யூ கல்சர் வாழை பயிரிடுவதில் முக்கிய மையமாக விளங்குகிறது. அங்கு விவசாயிகள் டிஷ்யூ கல்சர் உபயோகித்து கிராண்ட் நெயின் என்ற வகை வாழை பயிரிடுகிறார்கள்.
டிஷ்யூ கல்சர் இவ்வளவு பிரபலமாக என்ன காரணம்?
- விளைச்சல் அதிகம்.
- வியாதி, பூச்சி குறைவு.
- எல்லா பருவ காலங்களிலும் இளஞ்செடிகள் கிடைக்கும்.
- உன்னதமான வகைகளை தேர்ந்தெடுத்து இளஞ்செடிகள் தயாரிக்கப் படுகின்றன.
- பழங்கள்: வாழை, அன்னாசி
- கரும்பு: கரும்பு ஆலைகள் டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகளை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளன.
- வாசனைப் பொருள்கள்: கொச்சியில் உள்ள வாசனைப் பொருள்கள் கழகம் முற்போக்கு விவசாயிகள் மூலம் டிஷ்யூ கல்சர் ஏலக்காய், வனில்லா பயிர் செய்வதை அதிகரித்துள்ளது.
- மூலிகைகள்: கத்தாழை, வெள்ளை முசிலிக் கிழங்கு.
- பூக்கள்: Carnation, Gerbera.
- மரங்கள்: சந்தனம், யூகலிப்டஸ், தேக்கு.
மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளும் உண்டு - உங்கள் அருகிலுள்ள விவசாய அலுவலகத்தில் விசாரியுங்கள்.
கனரா வங்கி மற்றும் சில வங்கிகளும் டிஷ்யூ கல்சர் விவசாயக் கடனுக்கு முதன்மை அளிக்கிறார்கள்.
No comments:
Post a Comment