
தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் அவியூர் கிராமத்தில் விவசாயக்கழிப்பு எரிபொருள் உபயோகம் செய்யும் புகை வராத 'ஊர்ஜா' அடுப்பு.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 5000 வீடுகளில இந்த அடுப்பை உபயோகம் செய்கிறார்கள்.
- பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகம் வடிவமைத்தது.
- அடுப்பு சீராக எறிவதற்காக பாட்டரியில் ஓடும் சிறிய மின்விசிறி உண்டு. இந்த பாட்டரி கரண்டில் சார்ஜ் செய்யக்கூடியது.
- அடுப்பு விலை ரூ. 675.
- ஆறு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு மாதம் சுமாராக ஆறு பை எரிபொருள் தேவை. ஒரு 5-கிலோ பை எரிபொருள் விலை ரூ. 20. இத்துடன் 3 லிட்டர் கெரொசின் சேர்த்து மாத மொத்தச் செலவு ரூ. 147. இந்த குடும்பத்துக்கு முன்னால் ஆன செலவு ரூ. 390.
- எரிபொருள் கரும்புச் சக்கை, நிலக் கடலைத் தோல்் மற்றும் சோளத் தட்டை மூலம் செய்யப்படுகிறது.
- இந்த அடுப்பு தமிழ் நாடு, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் சில இடங்களில் கிடைக்கிறது.
இந்த அடுப்பில் உள்ள சில பிரச்சினைகள்:
- தோசை சுட, சப்பாத்தி போட தீயைக் குறைக்க முடியாது.
- அடுப்பை பத்த வைத்த பின் காஸ், கெரொசின் அடுப்பு போல உடன் நிறுத்த முடியாது.
- பத்த வைத்த பின் மேலும் எரிபொருள் சேர்க்க முடியாது. அடுப்பை நிறுத்தி, சாம்பல் எடுத்து விட்டு, எரிபொருள் போட்டு மீண்டும் பத்த வைக்க வேண்டும். ஆனால் இதை சில நிமிடங்களில் செய்ய முடியும்.
No comments:
Post a Comment