
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் விலாஸ்பூர் கான்ட்ராக்ட் விவசாயி ப்ரகாஷ் குல்கர்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து கூர்க்கங் கிழங்கு பயிர் செய்கிறார்.
கான்ட்ராக்ட் விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது சமீபத்தில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
- முக்கியமாக விளைச்சல் செலவும், விற்பனை செலவும் மிகக் குறைவு.
- கான்ட்ராக்டர்கள் விதை கூடிய இதர பொருட்களும் கொடுத்து, தொழில் நுட்ப உதவியும் செய்கிறார்கள்.
- விளைபொருளை அறுவடைக்கு பின்னர் தரம் மேம்பாடு செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள்.
- மேலான தரம், மற்றும் தொடர்ச்சியாக விளைபொருள் கிடைப்பதற்கு கான்ட்ராக்ட் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
கான்ட்ராக்ட் விவசாயத்துக்கு மற்ற உதாரணங்கள்:
- தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் மற்றும் செங்கிப்பட்டியில் செந்திகைப்பூ விளைச்சல்.
- தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் மருந்து கூர்க்கங் கிழங்கு மற்றும் மஞ்சள் பயிர் செய்யப்படுகிறது.
- இந்தூரில் நாபெட் நிறுவனம் உருளைக்கிழங்கு கான்ட்ராக்ட் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளது.
- அக்ரோ டெக் புட்ஸ் நிறுவனம் வாரங்கல் மாவட்டத்தில் சோளம் கான்ட்ராக்ட் விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளது.
- உத்தர கன்னட மாவட்டம் ஜொய்டா, கார்வார் மற்றும் எல்லாபூரில் காத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம் எண்ணை பால்ம் பயிர் செய்ய உத்தேசித்துள்ளது.
- ஹாட்சன் அக்ரோ புரோடக்ட் நிறுவனம் கான்ட்ராக்ட் பால் பண்ணைகளுக்கு கடன் உதவி தர ஸ்டேட் பாங்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- காட்டன் கார்ப்பொரேஷன் கோவை மாவட்டம் அன்னூரில் பஞ்சு கான்ட்ராக்ட் விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment