
எஸ்.ஆர்.ஐ. முறையின் முக்கிய அம்சங்கள்:
- வழக்கம் போல வயலில் தண்ணீரை அதிகம் பாய்ச்ச வேண்டாம். பாய்ச்சலும் காய்ச்சலுமான நீர்ப்பாசனம்.
- 14-நாள் நாற்றை கவனமாக சுமார் 3/4 அடி இடம் விட்டு ஒற்றை நாற்று நட்டால் போதும்.
- உருளும் களைக் கருவியை வைத்து, பயிற் வளர்ந்து மறைக்கும் முன்னர் சில தடவை களை எடுக்க வேண்டும்.
- இயற்கை உரம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் சேமிப்பு தவிர மற்ற பயன்கள்:
- ஒரு ஹெக்டேருக்கு (சுமார் 2 1/2 ஏக்கர்) வழக்கமாக 30 முதல் 60 கிலோவுக்கு பதிலாக 8 கிலோ விதை மட்டுமே தேவை.
- ரசாயன உரம், பூச்சி மருந்து சீராகவே தேவை.
தமிழ்நாட்டில் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி நெற்பயிர் விவசாயம் செய்து பயன் பெற்ற சில விவசாயிகள்:
- சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீர் அதிகம் கிடையாது. அங்கு மஹிபாலன்பட்டி திரு. K. சண்முகம் சென்ற வருடம் ஹெக்டேருக்கு 4,750 கிலோ அறுவடை செய்தார். இந்த வருடம் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி 8,750 கிலோ.
- சேலம் மாவட்டம் பள்ளதாத்தனூர் திரு. C. ரவி சென்ற வருடம் ஹெக்டேருக்கு 6.483 கிலோ அறுவடை செய்தார். இந்த வருடம் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி 9,633 கிலோ.
- விழுப்புரம் திருமதி. விஜயலட்சுமி அதே அளவு த்ண்ணீர் உபயோகித்து 40 சதவிகிதம் அதிக நிலத்தில் விவசாயம் செய்கிறார்.
பல விவசாயிகள் விவசாயம் செய்து பார்த்த ஆய்வில் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 12,719 அதிக நிகர வருமானம் கிடைக்கிறது. வழக்கமாக செய்யும் விவசாயம் போல இரண்டு மடங்கு லாபம்!