Monday, April 14, 2008

உப்பு நீர்ப் பாசனம் செய்து பல மூலிகைகள் பயிர் செய்ய முடியும்



உப்பு நீர்ப் பாசனம் செய்து பயிர் செய்யக் கூடிய மூலிகைகளில் ஒன்று நித்யகல்யாணி.




  • உப்பு இயற்கையிலேயே பாறைகளிலும், கனிமப்பொருள்களிலும் இருப்பதால் மழைநீர் தவிர மற்ற எல்லா நீரிலும் ஓரளவு இருக்கும்.
  • நீரில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதை EC Meter என்ற கருவி வைத்து மின்சாரக் கடத்தல் மூலம் அளக்க முடியும். நல்ல தண்ணீருக்கு EC அளவு 0 முதல் 1 வரை இருக்கும். கடல் நீர் EC அளவு சுமார் 45.
  • பல பயிர்களுக்கு உப்புத்தண்ணீர் ஆகாது. சில பயிர்கள் விளைச்சல் குறையும். ஆனால் சில பயிர்கள் நன்றாக வளரும்.

கோவை தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழகம் 20-க்கும் மேலான மூலிகைகளை உப்பு நீரில் பயிர் செய்து பார்த்தனர்:

  • EC அளவு 0 முதல் 10 வரை உள்ள உப்புத்தண்ணீர உபயோகப் படுத்தப்பட்டது.
  • ஆடாதொடை, கத்தாழை, நிலவேம்பு, நித்யகல்யாணி, கரிசலாங்கண்ணி, கண்வழிக்கிழங்கு, சக்கரைக்கொல்லி, தும்பை, துளசி, கீழாநெல்லி, மணத்தக்காளி மற்றும் தூதுவளை இடிகரை, ஆருக்குட்டி கிராமத்தில் பயிர் செய்யப்பட்டன. ஒரு விவசாயி EC 2 முதல் 4 வரை உள்ள கிணற்றுத் தண்ணீரில் பயிர் செய்தார். மதன கோபால் என்ற மற்றொரு விவசாயி EC 6 உள்ள கிணற்றுத் தண்ணீரில் பயிர் செய்தார்.

ஆகவே கிணற்றுத் தண்ணீர் உப்பாக இருந்தால் விவசாயிகள் சோர்வடைய வேண்டாம். பல மூலிகைகள் உப்புத் தண்ணீரிலும் நன்றாக வளருகின்றன.

மூலிகைகளுக்கு மார்க்கெட்டில் ஏற்றுமதி வாய்ப்பும் கூடவே, தேவை அதிகரித்து வருகிறது.

No comments: