Tuesday, April 15, 2008

செங்கல் சூளையில் எரிபொருளைக் குறைத்து அதிக லாபம் பெருங்கள்


கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப முறையில் செங்குத்துச் சந்து செங்கல் சூளை. இதை வி.எஸ். பி.கே அல்லது வி.எஸ்.கே என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதி்கமாக செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ளன. இவை மூன்று வகை:
  • அடுக்குச் சூளை.
  • கட்டுக் கால்வாய் சூளை. இவற்றில் சில நிலையான புகை போக்கி, சில நகற்றக்கூடிய புகை போக்கி உள்ளவை.
  • கீழ் நோக்கி காற்றோட்டச் சூளை.

சீன கிராமங்களில் செங்கல் தயாரிப்போர் 1970 வாக்கில் செங்குத்துச் சந்து செங்கல் சூளை கண்டுபிடித்தனர். ஸ்விஸ் Agency for Development and Cooperation, The Energy and Resources Institute, புது டெல்லி மற்றும் பல பணிமனைகள் சேர்ந்து இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். 1996-ல் மாதிரி சூளை மத்தியப் பிரதேசத்தில் தாட்டியா என்ற ஊரில் நிருவப்பட்டது. இப்பொழுது இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சூளைகள் இயக்கப்படுகின்றன.

  • பத்து லட்சம் செங்கல் தயாரிக்க 105 டன் நிலக்கரி மட்டுமே தேவை. கட்டுக் கால்வாய் சூளைக்கு 160 டன் நிலக்கரி தேவை.
  • ஆனால் ஆரம்ப முதலீடு கட்டுக் கால்வாய் சூளைக்கு 15 லட்ச ரூபாய் மட்டுமே. செங்குத்துச் சந்து செங்கல் சூளைக்கு 21 லட்ச ரூபாய் முதல் போட வேண்டும் (2001 மதிப்பீடு).
  • இந்த தொழில்நுட்பம் குறைந்த பட்சம் தினம் 8000 செங்கல் தயாரிக்கும் சூளைகளுக்கே உதவும்.
  • மழைக்கு கூறை உள்ளதால் வருடம் முழுவதும் இயக்க முடியும்.
  • நிலம் குறைவாகவே தேவை.
  • சீராக சுடுவதால் நல்ல தரமுள்ள செங்கல் தயாரிக்கிறது.
  • எரிபொருளை சிக்கனமாக உபயோகம் செய்வதால் மாசுபடுத்தும் புகையும், தூசும் குறைவு.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியை அடுத்த தோகூர் சிற்றூர் சுய உதவிக்குழு பெண்கள் 200 பேர் ஒன்று இணைந்து செங்குத்துச் சந்து செங்கல் சூளை நடத்துகின்றனர்.

1 comment:

Anonymous said...

please sir tamilnadu total no of
bricks