
மாவட்ட ஆட்சி உடனடியாக சாலை மற்றும் வடிகால்கள் வேலையைத் துவக்கியது. 32 கிராம வாசிகளுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அத்துடன் எந்த கிராமவாசிகள் கிராம வீட்டு வசதித் திட்டப்படி வீடுகள் கொடுக்க தகுதியானவர்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் அரசாங்கத்திடம் கீழ்க்கண்டவற்றைக் கேட்டு மனு கொடுக்கலாம்:
- அரசாங்க வேலைகள், ஆவணங்கள், பதிவுகள்.
- அவற்றை பிரதி, குறிப்பு எடுக்கலாம்.
- மின் அச்சு அல்லது மின் பிரதி கேட்கலாம்.
- எழுத்திலேயோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ ஆங்கிலம், ஹிந்தி அல்லது அந்த மாநில மொழியில் விண்ணப்பம் பொதுமக்கள் தகவல் அதிகாரிக்கு கொடுக்கலாம். மாதிரி இங்கே.
- தகவல் கேட்பதற்கு காரணம் கொடுக்க வேண்டியதில்லை.
- விண்ணப்ப கட்டணம் ரூ. 10. அத்துடன் பிரதி ஒன்றுக்கு சுமார் ரூ. 2.
- பீஹார் மாநிலத்தில் தொலைபேசி மூலமாகவே விண்ணப்பம் கொடுக்கலாம்.
- பல சமூக சேவை சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய உதவி செய்கிறார்கள். உங்கள் ஊரில் விசாரிக்கவும்.
2 comments:
கிராமங்கள் என்ற முக்கியமான விசயத்தைப் பற்றிய உங்கள் பதிவைக் காண மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
நண்பர் ரவி அவர்களே,
ஊக்குவிக்கும் மின் அஞ்சலுக்கு நன்றி!
இந்த பதிவை தமிழ் படிக்கும் கிராம மக்களிடையே பரவச்செய்ய வழிகள் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யோசனை எதுவும் இருந்தால் எழுதவும். நன்றி, வணக்கம்.
அசோகன்
Post a Comment