
இந்தியாவில் 2007 வருட கடைசியில் சுமார் 30,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. பெரும்பாலாக இவை நகரங்களிலேயே உள்ளன. ஆனால் இப்பொழுது வங்கிகள் இந்த சேவையை கிராமங்களுக்கும் அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன:
- கிராமங்களிலும் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
- சில வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த விவசாயிகள் கடன் மனு கொடுத்து அனுமதி பெறுவதற்கு மட்டுமே வங்கிக்குச் செல்ல வேண்டும். மற்ற வேலைகளை ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே செய்யலாம்.
மற்றும் கிராமங்களுக்கு உகந்த பல அம்சங்கள் உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் வர ஆரம்பித்துள்ளன:
- இந்திய தொழில் நுட்பக்கழகம், சென்னை மற்றும் இந்திய தொழில் நுட்பக்கழகம், பம்பாய் விலை குறைந்த ஏ.டி.எம். இயந்திரம் வடிவாக்கம் செய்துள்ளனர்.
- கைவிரல் ரேகை ஒப்பிட்டு வங்கி கணக்குக்கு அனுமதி.
- இந்திய மொழிகளிலேயே ஒலியில் உதவி செய்யும்.
- மின்சாரத்தடங்கல் வந்தால் தொடர்ந்து சேவை செய்ய பாட்டரி உண்டு.
- தூசி அதிகம் உள்ள கிராமச் சூழ்நிலையிலும் வேலை செய்யும்.